ஜூன் முதல் இலங்கையில் எரிபொருட்களுக்கு விலை குறைப்பு.... முள்ளிநியூஸ்

ஜூன் முதல் இலங்கையில் எரிபொருட்களுக்கு விலை குறைப்பு....

சீனாவின் சைனோ பெக் மற்றும் அமரிக்காவின் ஷெல் ஆகிய நிறுவங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோகம் செய்ய இணைகின்றன. எதிர்வரும் ஜூன் மாதம் முதல், எரிபொருட்களை விற்பனை செய்ய குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச விலைகள் என இரு விலைகளை அறிவிக்க மின் சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தீர்மானித்துள்ளது.




இந்த மாத இறுதியில், இலங்கையில் எரிபொருள் விநியோக கட்டமைப்புக்குள் சீனா மற்றும் அமரிக்காவின் இரு நிறுவனங்கள் உள்வாங்கப்படும் நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது... இம்மாத இறுதியில், சீனாவின் சைனோ பெக் மற்றும் அமரிக்காவின் ஷெல் ஆகிய நிறுவங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோகம் செய்ய இணைகின்றன.

அதன்படி ஜூன் மாதம் ஆகும் போது, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஐ.ஓ.சி. எனும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சைனோ பெக் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடவுள்ளன.

இம்மாதம் இறுதிக்குள் மின் சக்தி எரி சக்தி அமைச்சுக்கும் சீன, அமரிக்க நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளன. அதன்படி அந்நிறுவனங்களுக்கு தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையம் வீதம் வழங்கப்படவுள்ள நிலையில், மேலும் 50 நிலையங்களை அவர்களே அமைத்துக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே நான்கு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் போது ஏற்பட வல்ல மோசடிகளை தடுக்க, விலை இடைவெளியொன்றினை அறிவிக்குமாறு ஷெல் நிறுவனம் அமைச்சிடம் கோரியுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்டே அமைச்சு, டீசல், பெட்ரோல், மண்ணென்ன்னெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச விலைகளை நிர்ணயம் செய்யவுள்ளது.... இதற்காக சுயாதீன நிறுவனம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ள நிலையில் அந்நிறுவனம் மாதாந்தம் இவ்விலைகளை அறிவிக்கும் என அறிய முடிகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW