தொடர் திருடியை பிடிக்க : பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார் முள்ளிநியூஸ்

தொடர் திருடியை பிடிக்க : பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கடன் அட்டையை திருடி அதில் எண்பத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை வாங்கியுள்ளார். 

 பெண்களின் கடன் அட்டைகள், வங்கி அட்டைகள் மற்றும் பணப்பைகளை திருடும் யுவதியை கண்டுபிடிக்க கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 



 இந்த யுவதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களில் பல இலட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக தேடிவருவதாக கூறப்படுகிறது. பணப்பைகள் உட்பட பல்வேறு பொருட்களை திருடுவது போன்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதுடன், அதன் அடிப்படையில், இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கம்பளை நகரில் உள்ள அழகு நிலையம் ஒன்றிற்கு வந்த அவர், பையிலிருந்த கடன் அட்டையை திருடி அதில் எண்பத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை வாங்கியுள்ளார். மேலும், நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்த காட்சிகள் கமராக்களில் பதிவாகியுள்ளது. கம்பளை பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 இந்த யுவதி தொடர்பில் கம்பளை, நாவலப்பிட்டி, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW