சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த பரீட்சையில் 4,72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
3,94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகளின் போக்குவரத்து வசதிகளுக்காக பேரூந்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
