கட்டுமான துறையில் பலருக்கு வேலையிழப்பு
நிர்மாணத்துறையின் பணிகளும் 70 வீதத்தால் முடங்கியுள்ளது
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான துறையில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தங்களுடைய வேலைகளை இழந்துள்ளதாக தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நிர்மாணத்துறையின் பணிகளும் 70 வீதத்தால் முடங்கியுள்ளதாக அதன் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டுக் கடன்களோ அல்லது வெளிநாட்டு உதவிகளோ கிடைக்கும் வரை வீதி நிர்மாணமோ அபிவிருத்தியோ இடம்பெறாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் வரிச்சுமையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
மேலும், சந்தையில் சீனி மற்றும் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்றவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
