தங்கம் கடத்திய அலி சப்ரிக்கு அனுமதி : ஜனகவுக்கு தடை இதுவா சிஸ்டம் சேஞ்?
ஜனக ரத்நாயக்கவின் குடும்பத்தினர் நாடாளுமன்ற கலரிக்கு வர தடை விதித்துள்ளனர்.
ஆனால், வெளிநாட்டிலிருந்து திருட்டுத்தனமாக தங்கத்தைக் நாட்டுக்குள் கடத்திக்கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று சபைக்கு வந்து வாக்களிக்க இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதுவா சிஸ்டம் சேஞ் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனக ரத்நாயக்க மீதான இன்றைய யோசனையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷக்கள் பக்கமா? நாட்டின் பொதுமக்கள் பக்கமா அல்லது நீதியின் பக்கமா? அநீதியின் பக்கமா நிற்போகிறீர்கள் என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
ஜனக பற்றி பேசுவதற்குப் பதிலாக அவர் செயற்பட்டது யாருக்காக? அவர் என்ன செய்தார் என்பதையே பார்க்க வேண்டும்.
வாக்களிக்கும்போது ஒவ்வொருவரின் பெயரைக் குறிப்பிட்டு வாக்களிக்க வேண்டும். நாட்டு மக்கள் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
