காதலியை கொலை செய்த காதலன் கைது...
பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த வருணி நிரோஷா குமாரி என்ற 35 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பல்லேகல கலாபுர நத்தராம்பொத்த பிரதேசத்தில் காதலியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர், கடந்த 4 ஆம் திகதி அதிகாலை பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த வருணி நிரோஷா குமாரி என்ற 35 வயதான பெண்ணை கொலை செய்துள்ளார்.
சந்தேக நபர் பெண்ணை தாக்கி கொலை செய்திருந்ததுடன் சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலில் பல இடங்களில் தழும்பு காயங்கள் காணப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
