பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒட்சிசன் திருட்டு : 6 பேர் கைது முள்ளிநியூஸ்

பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒட்சிசன் திருட்டு : 6 பேர் கைது



இன்று சந்தேக நபர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் நீண்ட நாட்களாக, பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பயன்பாட்டுக்கு எடுத்து வரப்படும் ஒட்சிசன் சிலிண்டர்களில் பல சட்ட விரோதமாக திருடப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவம் தொடர்பில் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறினர். ஒட்சிசன் திருட்டு தொடர்பில், பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, வலய குற்றத் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படியே இன்று சந்தேக நபர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ஒட்சிசன் திருட்டு இடம்பெற்று வந்துள்ளதுடன், இதுவரை திருடப்பட்ட ஒட்சிசன் சிலிண்டர்களின் எண்ணிக்கை 210 என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு திருடப்படும் ஒட்சிசன் சிலிண்டர்கள், 25 ஆயிரம் ரூபா முதல் 40 ஆயிரம் ரூபா வரையிலான பணத்துக்கு பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலன்னறுவை நீதிவான் முன் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW