இளம் பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் -விகாராதிபதி கைது முள்ளிநியூஸ்

இளம் பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் -விகாராதிபதி கைது



பல பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் சூரியவெவ ரம்முதுவவ விகாரையின் விகாராதிபதி, விகாரையில் வசித்து வந்த 15 வயதான இளம் பிக்குவை மோசமான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரியவெவ ரம்முதுவெவ போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி கடமையாற்றும் கெட்டபொல அமரகீர்த்தி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தமது விகாரையில் வசித்து வரும் 15 வயதான இளம் பிக்குவை மோசமான முறையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பிக்கு சிகிச்சைக்காக தெஹிகஸ்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW