சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்த இலங்கை பெண் உயிரிழப்பு
சிங்கப்பூரில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கொடுவ பிரதேசத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரால் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்து தனது நண்பர்களிடம் வட்ஸ்அப் ஊடாக தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு வீட்டு உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் வீட்டுக்காரரிடமிருந்து தனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றும் இலங்கைப் பெண் தனது நண்பர்களிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில்,
சிங்கப்பூரில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மரணத்தை நேற்று உறுதிப்படுத்திய வெளியுறவு அமைச்சகம், சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பிரியங்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வீட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்துவிட்டதாகவும், அவரது மரணம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இலங்கை தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
