பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடி கடற்படை வீரர்.....
சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சித்த போது, அவர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தலைகவசங்களால் தாக்கியுள்ளனர்.
பொலிஸாரின் ஆணையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் குற்ற விசாரணைப்பிரிவின் இரண்டு அதிகாரிகளை தலைகவசங்களினால் தாக்கி காயப்படுத்திய கடற்படை வீரர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவை பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினர் நேற்று மாலை சீதுவை வடிச்சாலை வீதியில் உடனடியான சோதனை சாவடியை அமைத்து நபர்கள் மற்றும் வாகனங்களையும் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர். சமிக்ஞையை பொருட்படுத்தாது சந்தேக நபர்கள் சென்றதன் காரணமாக இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று சீதுவை நகருக்கு அருகில் நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களை சோதனையிட்ட போது அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சித்த போது, அவர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தலைகவசங்களால் தாக்கியுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிவித்ததை அடுத்து பொலிஸ் குழுவொன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சந்தேக நபர் திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் 25 வது கடற்படை வீரர் என்பதுடன் மற்றைய நபர் சீதுவை பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதான நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீதுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.....
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
