அவுஸ்திரேலியா பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 'Hunter Valley'பிரதேசத்தில் இன்று நடந்த பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருமண வைபவத்தில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஹன்டர் வெளி மற்றும் சிட்னி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடக்கும் பேருந்தில் 30 பேருக்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் 58 வயதான பேருந்து சாரதியை கைது செய்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
