இந்திய ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு முள்ளிநியூஸ்

இந்திய ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு

ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு


அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்தார். 

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. "இதுவரை 850 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

100க்கும் மேற்பட்ட கூடுதல் மருத்துவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW