கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது!
June 05, 2023
All News
,
AllNews
,
Computer
,
Crime News
,
pulmoddai
,
Sri Lanka
,
World
,
World political
பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, கறுப்புப்பூச்சு பூசப்பட்ட சுமார் 4 கிலோ 611 கிராம் தங்கம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது எட்டரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை தொடர்பில் சுங்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
"35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர், இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்தபோது சுங்க அதிகாரிகளால் தங்கத்தைக கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
சந்தேக நபர் 3 ஆம் திகதி காலை 6.45 மணியளவில் பாரிஸிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அவரது பொதியிலிருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் சோதனையில் அதனைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவற்றின் மீது கறுப்புப்பூச்சு பூசப்பட்டிருந்தது.
சந்தேக நபரான பிரான்ஸ் நாட்டவர் அபராத தொகையை செலுத்த தவறிய நிலையில், சுங்க அதிகாரிகளால் நீர்கொழும்பு பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
