பஸ் விபத்தில் மாணவன் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் முள்ளிநியூஸ்

பஸ் விபத்தில் மாணவன் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்

பஸ் விபத்தில் மாணவன் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்


கெலின்கந்தயில் இருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகெலி எல்ல பிரதேசத்தில் வீதியில் வழுக்கிச் சென்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, பஸ்ஸின் சாரதி உட்பட 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW