பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் உயிரிழப்பு முள்ளிநியூஸ்

பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் உயிரிழப்பு

பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் உயிரிழப்பு


இபலோகம தம்பெலஸ்ஸாகம பிரதேசத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு பாடசாலை மாணவி ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

குறித்த விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரு மாணவர்களும் , மாணவியும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மரதன்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரையும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்ததாக கூறப்படும் இபலோகம தம்பெலஸ்ஸாகம பிரதேசத்தை சேர்ந்த தனுக மிஹிரங்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த மாணவன் மரதன்கடவல ராகுல வித்தியாலயத்தில் கல்வி கற்று இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 (08) நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோதே இந்த மாணவன் விபத்துக்குள்ளாகியுள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்துக்குள்ளான மற்றைய மாணவி தெரிவிக்காமல் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, விபத்துக்குள்ளான பாடசாலை மாணவர்கள் பயணித்ததாகக் கூறப்படும் இரு மோட்டார் சைக்கிள்களையும் இப்பலோகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இப்பலோகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW