மசாஜ் நிலையத்திலிருந்து இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது முள்ளிநியூஸ்

மசாஜ் நிலையத்திலிருந்து இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

இலஞ்சம் பெற்ற முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது


கடவத்தை பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையத்திலிருந்து 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றக் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிககளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த மசாஜ் நிலையத்தின் செயற்பாடுகளை தடையின்றி தொடர்ந்து நடாத்துவதற்கு கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு வழங்குவதற்கென தெரிவித்து மசாஜ் நிலைய முகாமையாளரிடம் இவ்வாறு பணம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அதன்படி உரிய மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதோடு, முறைப்பாட்டின் பிரகாரம், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடவத்தை பகுதியில் நடத்திய சோதனையில் முகாமையாளரிடம் இருந்து உரிய தொகையை இலஞ்சமாக காரொன்றுக்குள் வைத்து பெறும்போது முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சபுகஸ்கந்த பொலிஸில் கடமையாற்றும் போது கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் சேவையை விட்டு விலகிய பொலிஸ் கான்ஸ்டபிள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW