தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு முள்ளிநியூஸ்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு / இந்தியா


இந்தியா - மகாராஷ்டிரா மாநிலத்தின் உட்டான் கடற்கரையில் பயணப் பைக்குள் வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்றே கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சடலத்தின் வலது கையில் திரிசூலத்தின் பச்சை குத்தப்பட்டுள்ளதுடன் இரண்டு பகுதிகளாக உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் காலை 8 மணியளவில் நடந்துள்ளதுடன், அதன் பிறகு உட்டான் கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

"25 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்ணின் சடலம் தலை இல்லாமல் உள்ளது" என்று மூத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் தாதாராம் கரண்டே தெரிவித்தார்.

பயணப் பை கரை ஒதுங்கியதா அல்லது அங்கேயே வைக்கப்பட்டிருந்ததா என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW