எகிப்து செங்கடலில் படகு விபத்து மூன்று பிரித்தானியர்கள் உயிரிழப்பு முள்ளிநியூஸ்

எகிப்து செங்கடலில் படகு விபத்து மூன்று பிரித்தானியர்கள் உயிரிழப்பு

எகிப்து செங்கடலில் படகு விபத்து மூன்று பிரித்தானியர்கள் உயிரிழப்பு


எகிப்து செங்கடலில் தீப்பிடித்து எரிந்த டைவிங் படகில் இருந்த மூன்று பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்கூபா ட்ராவல் (Scuba Travel) இன் செய்திகள் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது, படகில் ஒரு வாரம் தங்கியிருந்த 15 தகுதி வாய்ந்த டைவிங் ஆர்வலர்களில் குறித்த மூன்று பயணிகளும் அடங்குவர்.

ஸ்கை நியூஸ் செய்திகளின்படி, 15 டைவர்ஸில் 12 பேர் மற்றும் 14 பணியாளர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகின் இயந்திர அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

எகிப்தின் செங்கடல் ரிசார்ட்ஸ் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கடற்கரைகளைக் கொண்டுள்ளது மற்றும் ஐரோப்பாவிலிருந்து வருபவர்களிடையே இது மிகவும் பிரபலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW