ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய உத்தரவு முள்ளிநியூஸ்

ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய உத்தரவு

ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய உத்தரவு


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கண்டி நீதிவான் மொஹம்மட் ராபி உத்தரவிட்டுள்ளார். 

கண்டி பகுதியின் ஆசிரியை ஒருவரான நாமலி விஜேசிங்க என்பவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து ஒரு மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டு அதனை மீள செலுத்தாமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெறும் நீதிமன்ற விசாரணைகளுக்கு அவர் இன்று ஆஜராகவில்லை. 

இதனையடுத்தே இந்த உத்தரவை நீதிவான் பிறப்பித்தார். கண்டி வலய குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW