மதுபோதையில் உணவக ஊழியரை தாக்கிய மதுவரி திணைக்கள அதிகாரிகள்!
மதுவரித் திணைக்கள ஆணையாளரின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில், அந்த உணவகத்தின் பணியாளர் ஒருவரும், மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவரும், காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன் கோல்பேஸ் கட்டடத்தொகுதியின் 6ஆம் மாடியில் உள்ள உணவகம் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடமையை நிறைவுசெய்த குறித்த உணவகத்தின் பணியாளர் ஒருவர், தமது தலைக்கவசத்தை மேசை ஒன்றின் மீது வைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இடத்திற்குச் சென்ற, மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, அந்த தலைக்கவசத்தை எடுத்துச்செல்ல முயற்சித்து, பின்னர் மீண்டும் அங்கேயே வைத்துள்ளமை சி.சி.ரி.வி காணொளி காட்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகள், குறித்த உணவக முகாமையாளர் மற்றும் பணியாளருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகள், குறித்த உணவகத்தின் பணியாளர் மீது தாக்குதல் நடத்துவது, சி.சி.ரிவி காணொளிக் காட்சிகளில் பதிவாகி உள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது, குறித்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள், மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
