ஏஐ தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த கூகுள்
கூகுள் நிறுவனம் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
AI தொழில்நுட்பம் பல தகவல்களை சேமித்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் பயனர்களுக்கு ஏற்றவாறு அதனை அமைத்து தரக்கூடியது.
ஊழியர்கள் சிலர் இணைந்துதான் ஒரு வெப்சைட் உருவாக்க இயலும் என்ற நிலைமாறி, நாம் AI தொழில்நுட்பம் வாயிலாக இதனை உருவாக்கிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அமைத்தாலும் பல வேலை நீக்கங்களும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி AI தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகுந்த தகவல்களை பரிமாறும்போது அவை வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும், AI வாங்கும் தகவல்களை அது நகலாக வெளியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “சாஃப்ட்வேர் ப்ரோகிராம் உருவாக்கத்தில் தேவையற்ற பரிந்துரைகளை பார்டு தொழில்நுட்பம் வழங்கக் கூடும். ஆனால், ப்ரோகிராமர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
எனினும், இந்த தொழில்நுட்பத்திற்கான கட்டுப்பாடுகளை வரையறுக்க விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் சாட்ஜிபிடி, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பல பில்லியன் கணக்கில் டாலர்களை ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளன.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊழியர்களை கூகுள் அறிவுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
உலகில் எண்ணற்ற நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன.
சாம்சங், அமேசான், டாட்சே வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை சில வரையறைகளுடன் பயன்படுத்தி வருகின்றன.
உலகெங்கிலும் 43 சதவீத பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தில் சாட்ஜிபிடி மற்றும் இதர ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
