கால்வாயில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!
June 11, 2023
All News
,
Crime
,
Death
,
Sri Lanka
அனுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள ஹால்பானு கால்வாயில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி பகுதியினூடாக பாயும் ஹால்பானு கால்வாயில் மீட்கப்பட்ட குறித்த பெண் உயிரிழந்து சுமார் 5 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பெண்ணின் சடலம் உருக்குலைந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹால்பானு கால்வாய் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிய போது சடலத்தை கண்டுள்ளார்.
பின்னர் அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்த விவசாயி இது குறித்து அநுராதபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
