இலஞ்சம் வாங்கிய பிரதேச சபை செயலாளர் கைது முள்ளிநியூஸ்

இலஞ்சம் வாங்கிய பிரதேச சபை செயலாளர் கைது

இலஞ்சம் வாங்கிய பிரதேச சபை செயலாளர் கைது


சூரியவெவ பிரதேச சபை செயலாளர் பிரதேச சபையில் 50,000 ரூபா இலஞ்சம் கோரும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அம்பலாந்தோட்டையைச் சேர்ந்த நபரொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் (விசாரணைகள்) சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW