ஜித்தாவில் அமெரிக்க தூதுரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு இருவர் பலி முள்ளிநியூஸ்

ஜித்தாவில் அமெரிக்க தூதுரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு இருவர் பலி

ஜித்தாவில் அமெரிக்க தூதுரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு இருவர் பலி


ஜித்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன் நடந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் மற்றும் துப்பாக்கி ஏந்திய ஒருவர் உயிரிழந்ததாக சவூதி பொலிஸார் தெரிவித்துள்ளது. 

 துணைத் தூதரக கட்டிடத்தின் முன் காரில் இருந்து இறங்கிய ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொல்லப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 "ஜித்தாவில் உள்ள அமெரிக்க துணை தூதரக கட்டிடம் அருகே காரில் வந்த நபர் ஒருவர் கையில் துப்பாக்கி ஏந்தியபடி அதிலிருந்து இறங்கினார், இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தேவைக்கேற்ப சமாளிக்க முயற்சித்தனர். 

 இதன்போது இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டதாக” மக்கா பிராந்திய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

 இந்த சம்பவத்தின்போது நேபாள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW