தென்னைக்கு அச்சுறுத்தலாக இருந்த-வெண் ஈயை கட்டுப்படுத்த புதிய தீர்வு
வெண் ஈயைக் கட்டுப்படுத்தும் வகையில் இயல்பாகவே உருவாகக்கூடிய இந்த ஒட்டுண்ணியை தெங்கு அபிவிருத்தி சபை மற்றும் டெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் நேற்று அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வென் ஈயைக் கட்டுப்படுத்தும் வகையிலான இந்த ஒட்டுண்ணி விவசாய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் பிரபாத் நிஷாந்தவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுண்ணி விவசாயத் திணைக்களத்தின் இரசாயன கூடத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் அதனை விவசாயிகளுக்கு இலவசமாக பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுண்ணி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் மூலம் தென்னைப் பயிர்ச்செய்கையில் அற்றுத்தலுக்குள்ளாகியுள்ள வெண் ஈ யின் எண்ணிக்கையை நூற்றுக்கு 95 வீதமாக மட்டுப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் தென்னை பயிர்ச் செய்கை மற்றும் அதற்கு மேலதிகமாக பழங்கள் மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கைகளிலும் வெண் ஈ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
லோரன்ஸ் செல்வநாயகம்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
