சாணக்கியன் புலம்பெயர் தமிழர்களின் கைக்கூலி : அமைச்சர் அலி சப்ரி காட்டம்
புலம்பெயர் தமிழர்களின் கைக்கூலியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று சிறப்புரிமை பிரச்சியையொன்னை எழுப்பிய அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பாராளுமன்றத்தில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் கைக்கூலியான சாணக்கியன், நேற்று பாராளுமன்றத்தில் நான் இல்லாதபோது என்னை பற்றி பேசியிருந்தார்.
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதில் அவருக்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவர்களை அவர் எதிர்க்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் தனக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சிறப்புரிமைகளை மீறுகிறார்.
குறைக்கும் நாய்களுக்கு கல்லெறிந்துகொண்டிருந்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாது.
எனவே, பாராளுமன்றத்தில் குறைக்கும் நாய்களுக்கு இனி நான் கல்லெறியபோவதில்லை எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
