இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஸகார்யன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (11.06.2023) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இதன்போது ரஷ்ய தூதுவர் கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து தருவதாக ஆளுநரிடம் ரஷ்ய தூதுவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
