வைத்தியர்கள் இருவரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் முள்ளிநியூஸ்

வைத்தியர்கள் இருவரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

வைத்தியர்கள் இருவரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்


யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர். காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW