கொக்குத்தொடுவாய் பகுதியில் வெடிபொருட்கள் விசேட அதிரடி படையினரால் அகழ்வு
குறித்த பகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியதாக அறியமுடிகின்றது.
மேலும் கடந்த வியாழக்கிழமை(06.07.2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், இராணுவத்திடம் சரணடைந்த பெண் போராளிகளுடையதா? அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
