ஐரோப்பிய நாடொன்றில் இலங்கைத் தந்தைக்கும் மகனுக்கும் நேர்ந்த சோகம் முள்ளிநியூஸ்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கைத் தந்தைக்கும் மகனுக்கும் நேர்ந்த சோகம்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கைத் தந்தைக்கும் மகனுக்கும் நேர்ந்த சோகம்

இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனுமே உயிரிழந்துள்ளனர். 

 தங்களது உறவினர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது இந்த அனர்த்தம் இடம்பெறுள்ளது. இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். 

 எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW