கணவனுக்கு தெரியாது ரகசிய டீல் பொலிஸார் முன் அதிர்ச்சி சம்பவம் முள்ளிநியூஸ்

கணவனுக்கு தெரியாது ரகசிய டீல் பொலிஸார் முன் அதிர்ச்சி சம்பவம்

கணவனுக்கு தெரியாது ரகசிய டீல் பொலிஸார் முன்  அதிர்ச்சி சம்பவம் யாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ள 2சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். 

 இந்த நிலையில் , கைதான மனைவியை பார்க்க வேண்டும் என பொலிஸ் நிலையம் வந்த கணவன் மனைவி மீது பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இந்நிலையில் அதிச்சியடைந்த பொலிஸார், கணவனின் தாக்குதலில் இருந்து மனைவியை காப்பாற்றியதுடன் , மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் கணவனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் ,கணவனுக்கு தெரியாமல் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது இதனையடுத்து , பெண்ணுக்கு போதைப்பொருளை விநியோகித்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW