பொலன்னறுவையில் பேருந்து ஆற்றில் விழுந்து கோர விபத்து: 10 பேர் பலி! 40 காயம் முள்ளிநியூஸ்

பொலன்னறுவையில் பேருந்து ஆற்றில் விழுந்து கோர விபத்து: 10 பேர் பலி! 40 காயம்

பொலன்னறுவையில் பேருந்து  ஆற்றில் விழுந்து கோர விபத்து: 10 பேர் பலி! 40 காயம்


பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலன்னறுவை – மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

 அத்துடன் விபத்தில் காயமடைந்த 30 க்கும் மேற்பட்டவர்கள் மனம்பிடிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில்,பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலன்னறுவையில் பேருந்து  ஆற்றில் விழுந்து கோர விபத்து: 10 பேர் பலி! 40 காயம்

பொலன்னறுவையில் பேருந்து  ஆற்றில் விழுந்து கோர விபத்து: 10 பேர் பலி! 40 காயம்


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW