பாண் விலையை குறைப்பதற்கான இயலுமை இல்லை வெளியான தகவல் முள்ளிநியூஸ்

பாண் விலையை குறைப்பதற்கான இயலுமை இல்லை வெளியான தகவல்

பாண் விலை குறைப்பதற்கான இயலுமை இல்லை வெளியான தகவல்


கோதுமை மா விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 நேற்று (18.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான கோதுமை மா விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்தது. 

 அதற்கமைய, பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

 எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட்டதால் அவற்றின் விலைகளை மீண்டும் குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW