செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல கிழக்கு மாகாணம் -நஸீர் அஹமட் முள்ளிநியூஸ்

செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல கிழக்கு மாகாணம் -நஸீர் அஹமட்

செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல கிழக்கு மாகாணம் -நஸீர் அஹமட்


கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?, இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது என அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார். 

 காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. 

 கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம். ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனவும், அது நிறுத்தப்படல் வேண்டும் எனவும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 அங்கு பேசும்போதே அமைச்சர் காரசாரமாகக் கிழக்கு மாகாண ஆளுநரை விமர்சித்தார். தான் முதலமைச்சராக இருந்ததாகவும், ஆனால் இப்படி செயற்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW