பெருந்தொகையான கசிப்புக் கட்டுநாயக்க பொலிஸாரால் கைப்பற்றல் முள்ளிநியூஸ்

பெருந்தொகையான கசிப்புக் கட்டுநாயக்க பொலிஸாரால் கைப்பற்றல்

பெருந்தொகையான கசிப்புக் கட்டுநாயக்க பொலிஸாரால் கைப்பற்றல்

கட்டுநாயக்க ஹினடியன பிரதேச கால்வாய் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சும் இடம் ஒன்றைச் கட்டுநாயக்க பொலிஸார் சுற்றிவளைத்து கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதன்போது, சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான கசிப்பு, கோடா மற்றும் வடிகட்டும் உபகரணங்கள் 405,000 மில்லி கசிப்பு, ஸ்பிரிட் அடங்கிய 12 கலன்கள் 52,92,000 மில்லி கோடா அடங்கிய 28 பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

 கைதானவர்கள் ஹினடியன பகுதியைச் சேர்ந்த 50 வயது மற்றும் 35 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW