இலங்கையில் அஞ்சல் பணியாளர்களுக்கு விசேட சலுகை முள்ளிநியூஸ்

இலங்கையில் அஞ்சல் பணியாளர்களுக்கு விசேட சலுகை

இலங்கையில் அஞ்சல் பணியாளர்களுக்கு விசேட சலுகை

இலங்கையில் உள்ள அஞ்சல் பணியாளர்களுக்கு அஞ்சல் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, விசேட சலுகை ஒன்று வழங்கப்படவுள்ளது என்று அறிவிப்பக்கட்டுள்ளது. 

 அதன்படி, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய துவிச்சக்கரவண்டி அல்லாமல், முச்சக்கர வண்டிகளில் அஞ்சல் விநியோகம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 இதற்காக அஞ்சல், சேவையின் நவீனமயமாக்கலின் போது, நீண்டகாலமாகக் களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த துவிச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக 1000 முச்சக்கரவண்டிகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். 

 இதன் மூலம் வலுவான அஞ்சல் சேவையை உருவாக்குவதே இறுதி இலக்காகும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். 

 10 பில்லியன் செலவில் பொது-தனியார் கூட்டுப் பங்காளியாக இந்த நவீனமயமாக்கல் செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இதன் மூலம் அஞ்சல் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் 4,000 மில்லியன் ரூபாவால் குறைக்கப்படும். எனினும் அஞ்சல் திணைக்களம் எவ்வகையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW