காதலியை பார்க்க வீட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக ஆற்றில் முள்ளிநியூஸ்

காதலியை பார்க்க வீட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக ஆற்றில்

காதலியை பார்க்க வீட்டுக்கு  சென்ற இளைஞன் சடலமாக ஆற்றில்

பதுளை தல்தென 7 ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஆற்றில் காணப்பட்ட நிலையில் இளைஞனின் உடலை பொலிஸார் இன்று மதியம் மீட்டுள்ளனர்

 இலக்கம் 105, 5 ஆம் கட்டடை பதியத்தலாவ வீதி மஹியங்கனை என்ற முகவரியை சேர்ந்த 27 வயதான எம்.எம்.பிரபாத் சஞ்ஜீவ என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

 உயிரிழந்த இளைஞன், அவரது காதலி வசித்து வருவதாக கூறப்படும் தல்தென 7 ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்றைய தினம் இரவு சென்று தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

 இரவு அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதை அறிந்துக்கொண்ட வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு கீழே உள்ள ஆற்றில் சுமார் 300 மீட்டார் தூரத்தில் கிடந்த நிலையில் அவரது சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.  

 சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளுக்கு பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் பதுளை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW