அதிவேகமாக வந்த லொறி மோட்டார் சைக்கிளை மோதி தம்பதியினர் உயிரிழப்பு
இந்தச் விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது
அமில புஷ்பசிறி (34) மற்றும் அவரது மனைவி சத்துரராணி குமாரி (33) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக்கு சென்ற தம்பதி
குருணாகல் கட்டுவன மஹிந்த கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் தமது ஒரே மகளை அழைத்துச் செல்வதற்காகச் சென்றபோதே தம்பதியினர் இந்த விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த லொறி மோட்டார் சைக்கிளை மோதியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
