மூன்று பக்கம் எழுதிய கடிதத்துடன் வாவியில் சடலமாக முள்ளிநியூஸ்

மூன்று பக்கம் எழுதிய கடிதத்துடன் வாவியில் சடலமாக

மூன்று பக்கம் எழுதிய கடிதத்துடன் வாவியில் சடலமாக


லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் சடலம் வாவியிலிருந்து மீட்க்கப்பட்டிருப்பதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (26 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இவர் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைபடுத்தியதாகவும் தினமும் தொல்லை கொடுத்ததாகவும் மூன்று பக்க கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார்.

மேலும், கடிதத்துடன் திருமண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன வாவிக்கு அருகிலிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் நீரில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில், குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனர்.

 ஆகவே, குழந்தை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதோடு தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், தனது குழந்தையுடன் லிந்துல, லோகி தோட்டத்திலுள்ள அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள வாவியில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

 மேலும், குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW