அவுஸ்திரேலியா பயணிக்க காத்திருப்பவருக்கு மகிழ்ச்சித் தகவல்

மனிதாபிமான விசா ஒதுக்கீட்டை 20 ஆயிரமாக அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலிய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த விசா ஒதுக்கீடு 17 ஆயிரத்து 875 ஆக இருந்தது.
இந்நிலையிலேயே தற்போது இந்த விசா ஒதுக்கீடு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவால் வழங்கப்பட்டுவரும் மனிதாபிமான விசா ஒதுக்கீட்டை குறைப்பதற்கு 2014 இல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் தற்போது இடம்பெற்றுள்ள இவ் அதிகரிப்பானது, விசா ஒதுக்கீட்டை முன்னைய விகிதத்துக்கே கொண்டுசென்றுள்ளது.
" உலகளாவிய மனிதாபிமான நெருக்கடியை தீர்ப்பதற்கான அவுஸ்திரேலியாவின் பங்களிப்பை பலப்படுத்தவே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது" என்று அந்நாட்டு குடிவரவுத்துறை அமைச்சர் அன்ரு கில்ஸ் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையை எதிர்காலத்தில் 27 ஆயிரம்வரை அதிகரித்துக்கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW