சிறுவனை தும்புதடியால் கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது

சம்பவத்தின் அடிப்படையில், மாணவனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த ஆசிரியையை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
இவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் தற்போது, மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொஸ்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவன் செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரண்டாம் வகுப்பு படிக்கும் குறித்த மாணவன், வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டு வேலையைச் செய்யாத காரணத்தினாலேயே மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும், குறித்த ஆசிரியை தொடர்பாக கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக மாணவனின் தாய், முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாக்கப்பட்ட மாணவனின் முதுகில் பல காயங்கள் இருந்துள்ளதுடன் தும்புத்தடி கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது