வெளிநாட்டிலிருந்து கொண்டு கூலிப்படையை ஏவி தாக்குதல் பரபரப்பு சம்பவம் முள்ளிநியூஸ்

வெளிநாட்டிலிருந்து கொண்டு கூலிப்படையை ஏவி தாக்குதல் பரபரப்பு சம்பவம்

வெளிநாட்டிலிருந்து கொண்டு கூலிப்படையை ஏவி தாக்குதல் பரபரப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் இன்று அதிகாலை வேளையில், வன்முறைக் கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அந்தக் கும்பல் தீக்கிரையாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கெமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதல்காரர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்குப் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, வவுனியா - தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் அங்கிருந்தவர்களை தாக்கி வீட்டிற்கு தீவைத்துள்ளனர்.

இதன்போது 10 பேர் தீக்காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தம்பதி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW