கல்ஓயா பிரதேசத்தில் மருமகனை சுட்டுக்கொன்ற மாமா

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகனை மாமா சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கல்ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் ஒரு பிள்ளையின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மகளின் வீட்டுக்குச் சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மருந்து மூடிய துப்பாக்கியுடன் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று ஹிகுராக்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW