அதிக முறை 400 ஓட்டங்கள் - சாதனை முறியடிப்பு! முள்ளிநியூஸ்

அதிக முறை 400 ஓட்டங்கள் - சாதனை முறியடிப்பு!

அதிக முறை 400 ஓட்டங்கள் - சாதனை முறியடிப்பு!


தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

 நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ஓட்டங்கள் குவித்தது. 

ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ஓட்டங்களில் அவுட்டானார். 5 வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 7 வது முறையாக 400 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 

 மேலும், அதிக முறை 400 ஓட்டங்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW