பாகிஸ்தானில் பாரிய தற்கொலைத் தாக்குதல் - 50 பேர் பலி

மஸ்துங் நகரில் நடைபெற்ற மத வழிபாட்டை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அந்நாட்டின் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி இந்த குண்டுவெடிப்பு "மிகவும் கொடூரமான செயல்" என்று கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW