நுவரெலியாவில் மனைவியின் தாக்குதலில் கணவர் உயிரிழப்பு

நுவரெலியா , விஜிதபுர பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்குமிடையில் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வீட்டில் குடிபோதையில் இருந்த கணவர், மனைவி வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த கணவர் தனது மனைவியைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் கணவனை மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய பெண் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW