வீதிக்கு இறங்கிய திருகோணமலை மீனவர்கள் முள்ளிநியூஸ்

வீதிக்கு இறங்கிய திருகோணமலை மீனவர்கள்

வீதிக்கு இறங்கிய திருகோணமலை மீனவர்கள்-Trincomalee fishermen blocked the road and protested


திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் இன்று திங்கட்கிழமை (11) காலை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் ஜமாலியா பகுதியில் திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி வருவதாகவும் இதனால் சிறிமாபுர பகுதியில் வசித்துவரும் சிறு மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் குறிப்பிடுகின்றனர். 

இதனையடுத்து போராட்ட இடத்திற்கு வருகைதந்த திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி மீனவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW