இராணுவத்திற்கு 74 ஆண்டு நிறைவு - 314 அதிகாரிகள் மற்றும் 1,565 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு முள்ளிநியூஸ்

இராணுவத்திற்கு 74 ஆண்டு நிறைவு - 314 அதிகாரிகள் மற்றும் 1,565 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு

இராணுவத்திற்கு 74 ஆண்டு நிறைவு - 314 அதிகாரிகள் மற்றும் 1,565 சிப்பாய்களுக்கு நிலை உயர்வு

74ஆவது ஆண்டு நிறைவான இன்று (10) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் சேனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1,565 சிப்பாய்கள் அடுத்த தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். 

 அதற்கமைய, பிரிகேடியர் நிலையிலிருந்த 7 அதிகாரிகள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 12 கேர்ணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 37 லெப்டினன் கேர்ணல்கள், கேர்ணல் நிலைக்கும் 41 மேஜர்கள் லெப்டினன் கேர்ணல் நிலைக்கும், 50 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 84 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 83 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினட் நிலைக்கும், நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் அதிகாரிகள் பிரிவில் இவ்வாறு நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

 83 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் II, அதிகாரவாணையற்ற அதிகாரிகள் -I நிலைக்கும், 183 பணிநிலை சார்ஜன்கள் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் – II நிலைக்கும், 203 சார்ஜன்கள் பணிநிலை சார்ஜன் நிலைக்கும், 414 கோப்ரல்கள் சார்ஜன் நிலைக்கும், 374 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும், மற்றும் 248 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளில் நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

 இராணுவத்தின் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற 7 பிரிகேடியர்கள் வருமாறு, மேஜர் ஜெனரல் டி.எ அமரசேகர யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஆர் எல்விட்டிகல யுஎஸ்பீ, மேஜர் ஜெனரல் ஐ.எச்.எம்.ஆர்.கே ஹேரத் யுஎஸ்பீ, என்டிசி, பீஎஸ்சி, மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.பி.எம் விஜயசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ காரியவசம், மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்பி குலதுங்க ஆர்ஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ ஆகியோர் ஆவர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW