வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை முள்ளிநியூஸ்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 

 இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW