திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் முள்ளிநியூஸ்

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது. 

 அப் போராட்டம் இன்று புதன்கிழமை (18) காலை 10.00 மணிக்கு திருகோணமலை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இருந்து ஆளுநர் செயலகம் வரை பேரணியாக இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் சிற்றுழியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW